மாடியில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி


மாடியில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி
x
தினத்தந்தி 2 July 2021 12:54 AM IST (Updated: 2 July 2021 12:54 AM IST)
t-max-icont-min-icon

மாடியில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலியானார்.

திருவரங்குளம்:
திருவரங்குளம் அருகே உள்ள திருக்கட்டளையை சேர்ந்த விவசாயி செல்வகுமார் (வயது 49). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு தூங்குவதற்காக மாடிக்கு சென்றபோது மாடியில் இருந்து கால் தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வகுமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வல்லத்திராகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story