சின்னவெங்காயம் விலை உயர்வு


சின்னவெங்காயம் விலை உயர்வு
x
தினத்தந்தி 2 July 2021 2:01 AM IST (Updated: 2 July 2021 2:01 AM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் சின்னவெங்காயம் விலை உயர்ந்தது.

திண்டுக்கல் : 


திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக அந்த பகுதியில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வருகின்றனர். 

இங்கு இருந்து கேரளா, பிற மாநிலங்களுக்கும் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் காய்கறிகள் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயம் வரத்து குறைந்து கொண்டே வருவதால், நாளுக்கு நாள் அதன் விலை உயர்ந்து வருகிறது. 


நேற்று முன்தினம் ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனையானது. 

நேற்று வரத்து குறைந்ததால், சின்னவெங்காயம் கிலோ ரூ.35 முதல் ரூ.60 வரை விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 


Next Story