கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 48 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 59, 55 வயதுடைய 2 ஆண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் 91 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 472 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 1,032 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. மாவட்டத்தில் நேற்று 2,091 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story