மக்கள் நீதிமன்றம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 10-ந் தேதி தேசிய லோக் அதாலத் மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 10-ந் தேதி தேசிய லோக் அதாலத் மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட நீதிபதி சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாவட்ட அளவில் நீதிமன்றங்களில் உள்ள நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி வருகிற 10-ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 10-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த லோக் அதாலத் நிகழ்ச்சியில் மொத்தம் 10 அமர்வுகளில் நீதிபதிகள், வக்கீல்கள் உதவியுடன் சமரசம் செய்யக்கூடிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருதரப்பினருக்கும் சமரச முடிவு எடுக்கப்படும். இதன்படி மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு, காசோலை மோசடி, உரிமையியல், குடும்ப பிரச்சனை, சமரச குற்ற வழக்குகளுக்கு தீர்வு காணப்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கோர்ட்டுகளில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சமரசம் செய்து கொள்ளக்கூடிய மேற்கண்ட பிரிவு வழக்குகளில் பொதுமக்கள் சமசரம் செய்து கொண்டு வழக்கினை முடித்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story