சீரான முறையில் குடிநீர் வழங்கக்கோரி பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் சீரான முறையில் குடிநீர் வழங்கக்கோரி பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூர் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டு பகுதிகளிலும் சீரான முறையில் குடிநீர் வழங்கக்கோரியும், பல்வேறு இடங்களில் தெரு விளக்குகள் எரியாததை கண்டித்தும் பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் கணபதி, மாவட்ட துணை செயலாளர் காயரம்பேடு தேவராஜ், பேரூர் தலைவர் குமார், துணை செயலாளர் வெல்டிங் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளரும், செங்கல்பட்டு சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான திருக்கச்சூர் கி.ஆறுமுகம், மாவட்ட தலைவர் பார்த்தசாரதி, மாவட்ட பொருளாளர் செல்வி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன உரையாற்றினார்கள். இதனை தொடர்ந்து பா.ம.க.வினர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் சண்முகம் செட்டியார், அண்ணாமலை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story