புரசைவாக்கத்தில் கடையின் கதவை உடைத்து ரூ.4½ லட்சம் துணிகர கொள்ளை


புரசைவாக்கத்தில் கடையின் கதவை உடைத்து ரூ.4½ லட்சம் துணிகர கொள்ளை
x
தினத்தந்தி 2 July 2021 12:20 PM IST (Updated: 2 July 2021 12:20 PM IST)
t-max-icont-min-icon

புரசைவாக்கத்தில் எலக்ட்ரிக்கல்ஸ் கடையின் கதவை உடைத்த கொள்ளையர்கள் ரூ.4½ லட்சத்தை கொள்ளை அடித்து சென்று விட்டனர்.

சென்னை,

சென்னை புரசைவாக்கம் பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, ஏ.பி.ரோடு சந்திப்பில் தினேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரிக்கல்ஸ் கடை உள்ளது.

நேற்று காலை தினேஷ்குமார், கடையை திறக்க வந்தபோது, கடையின் ஷட்டர் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், கல்லா பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.4½ லட்சத்தை கொள்ளை அடித்து சென்று விட்டதை கண்டு அதிர்ச்சி் அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story