கோவில்பட்டி தினசரி மார்க்கெட்டில் காய்கறி கடைகள் திறப்பு


கோவில்பட்டி தினசரி மார்க்கெட்டில் காய்கறி கடைகள் திறப்பு
x
தினத்தந்தி 2 July 2021 11:47 AM GMT (Updated: 2 July 2021 11:47 AM GMT)

கொரோனா ஊரடங்கு தளர்வால் பூட்டப்பட்டு கிடந்த கோவில்பட்டி தினசரி மார்க்கெட்டில் காய்கறி கடைகள் திறக்கப்பட்டு, வியாபாரம் நடந்தது.

கோவில்பட்டி:
கொரோனா ஊரடங்கு தளர்வால் பூட்டப்பட்டு கிடந்த கோவில்பட்டி தினசரி மார்க்கெட்டில் காய்கறி கடைகள் திறக்கப்பட்டு, வியாபாரம் நடந்தது. பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வந்து தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர்.
கொரோனா ஊரடங்கு
கொரோனா 2-வது அலை ஊரடங்கு காரணமாக கோவில்பட்டி தினசரி மார்க் கெட் பூட்டப்பட்டது. இங்கு இயங்கிவந்த 150-க்கும் மேற்பட்ட காய்கறி மற்றும் பழக்கடைகள் கோவில்பட்டி வ. உ. சி. அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் மற்றும் நாற்கர சாலையில் உள்ள கூடுதல் பஸ் நிலையம் ஆகியவற்றிற்கு மாற்றப்பட்டு விற்பனை நடந்து வந்தது.
கொரோனா பரவல் கட்டுப்பாட்டு க்குள் வந்ததால் நேற்று முதல் வ.உ.சி.அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் கூடுதல் பஸ் நிலையத்தில் இயங்கி வந்த காய்கறி மற்றும் பழக் கடைகள் அனைத்தும் கோவில்பட்டி நகரசபை பசும்பொன் உ. முத்துராம லிங்க தேவர் தினசரி மார்க் கெட்டிற்கு மாற்றப் பட்டு கொரோனா கட்டுப் பாட்டுக்கு உட்பட்டு விற்பனை செய்ய நகர சபை ஆணையாளர் ராஜாராம் ஏற்பாடு செய்தார். 
இதன்படி காய்கறி, பழக்கடைகள் திறக்கப்பட்டது. மார்க்கெட் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கடைக் காரர்கள் விற்பனை யாளர்கள் முககவசம் அணிந்து, வாடிக்கை யாளர்கள் சமூக இடை வெளியை கடைப் பிடித்து வியாபாரம் செய்ய வேண்டும் என்று நகரசபை ஆணையாளர் அறிவுறுத்தினார்.
பொதுமக்கள் ஆர்வம்
நேற்று காய்கறி கடைகள் வழக்கம்போல தினசரி மார்க்கெட்டில் திறக்கப் பட்டதால், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று ஏராளமானோர் மார்க்கெட்டுக்கு ஆர்வமுடன் வந்து காய்கறி களை வாங்கிச் சென்றனர்.
காய்கறி விலைகள் குறித்து வியாபாரி முருகன் கூறும்போது, ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ 30, கலர் கத்திரிக்காய் ரூ 20, தக்காளி ரூ 12, உருளைக் கிழங்கு ரூ 25, வெண்டைக் காய் ரூ. 30, வெங்காயம் ரூ 60, பல்லாரி ரூ 25, சீனி அவரைக்காய் ரூ. 30, அவரைக்காய் ரூ 60,மிளகாய் ரூ 45,இஞ்சி ரூ 50, பட்டர் பீன்ஸ் ரூ 120,முள்ளங்கி ரூ 40, குடைமிளகாய் 140, காலிபிளவர் ரூ30, கருணைக் கிழங்கு ரூ 60, சவ்சவ் ரூ 25, புடலங்காய் ரூ 25, பீக்கங்காய் ரூ 40, பாவகாய் ரூ 70, கேரட் ரூ 40, பீட்ரூட் ரூ 30, பீன்ஸ் ரூ 60, முருங்கைக் காய் ரூ 30, ஒரு கிலோவுக்கு என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது என்றார்.

-

Next Story