தூத்துக்குடியில் ஓட்டல் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை


தூத்துக்குடியில் ஓட்டல் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 2 July 2021 5:38 PM IST (Updated: 2 July 2021 5:38 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஓட்டல் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தை சேர்ந்தவர் நெல்லையப்பன் (வயது 46). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மதுகுடிப்பழக்கம் இருந்து வந்தது. சமீபகாலமாக சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தாராம். இதனை அவரது மனைவி கண்டித்து உள்ளார். இதில் மனம் உடைந்த நெல்லையப்பன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story