ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் மனு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் மனு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை.
சென்னை,
நடிகை சாந்தினி என்பவரை திருமணம் செய்வதாக கூறி குடும்பம் நடத்தி விட்டு ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை அடையாறு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு மணிகண்டன் தாக்கல் செய்த வழக்கை ஏற்கனவே, மாவட்ட செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.
இந்தநிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மணிகண்டன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், புகார் கொடுத்துள்ள பெண் 36 வயது கொண்ட நன்றாக படித்தவர். நல்ல உத்தியோகத்தில் இருந்தவர். எனக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். அவரை என்னால் 2-வது திருமணம் செய்ய முடியாது என்பதும் அவருக்கு நன்றாக தெரியும். சுப்ரீம் கோர்ட்டு அண்மையில் பிறப்பித்த தீர்ப்பில், திருமணம் செய்வதாக கூறி உறவு கொள்வது கற்பழிப்பு ஆகாது என்று கூறியுள்ளது. எனவே, எனக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Tags :
Next Story