தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2025-ம் ஆண்டு வரை நீடிக்கும்


தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2025-ம் ஆண்டு வரை நீடிக்கும்
x
தினத்தந்தி 2 July 2021 12:41 PM GMT (Updated: 2 July 2021 12:41 PM GMT)

தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2025-ம் ஆண்டு வரை நீடிக்கும் தமிழக அரசு உத்தரவு.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சிகள், பல்கலைக்கழக பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், ரூ.4 லட்சம் வரை மருத்துவ சிகிச்சைகள் பெறும் வசதி மற்றும் குறிப்பிட்ட சில நோய்களுக்கான அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு ரூ.10 லட்சம் வரை காப்பீடு பெறும் வசதி இருந்தது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த திட்டம் முடிவுக்கு வந்து பின்னர் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஜூன் 30-ந் தேதியுடன் அதாவது காப்பீட்டு திட்டம் முடிவுக்கு வந்தது. எனவே அதற்குரிய காப்பீட்டு நிறுவனத்தை நியமிப்பதற்கு தமிழக அரசு ஒப்பந்தம் கோரியது. அதில், மீண்டும் யுனைடெட் இந்தியா நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை ஜூலை 1-ந் தேதி முதல் 2025-ம் ஆண்டு ஜூன் 30-ந் தேதி வரை 4 ஆண்டுகளுக்கு அமல்படுத்த அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story