கோவில்பட்டி யில் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை


கோவில்பட்டி யில் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை
x
தினத்தந்தி 2 July 2021 7:09 PM IST (Updated: 2 July 2021 7:09 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் இளையரசனேந்தல் ரோட்டிலுள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கும் தண்ணீரை அகற்றும் பணி தொடங்கி உள்ளது. இதையொட்டி கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி:
கோவில்பட்டியில் இளையரசனேந்தல் ரோட்டிலுள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கும் தண்ணீரை அகற்றும் பணி தொடங்கி உள்ளது. இதையொட்டி கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரெயில்வே சுரங்கப்பாதை
கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோட்டில் ரெயில்வே சுரங்க வழிப் பாதை அமைக்கப்பட்டது. முதல் சர்வீஸ் ரோடு அமைக்கப்படாததால் சுரங்க வழிப்பாதை மத்திய பகுதியில் கழிவுநீர் மற்றும் மழைநீர் எப்போதும் தேங்கியே இருக்கும். கழிவுநீரை அப்புறப்படுத்த பல முயற்சிகள் எடுத்தும், கழிவுநீர் 24 மணி நேரமும் ஒன்று முதல் இரண்டு அடி வரை தேங்கி நிற்கும்.
மழை பெய்து விட்டால் இதன் அளவு அதிகரித்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுவது வாடிக்கையாக நடந்து வந்தது.
தண்ணீரை அகற்ற நடவடிக்கை
இதுபற்றி பொதுமக்கள் தரப்பில் புகார்கள் எழுந்ததன் அடிப்படையில் சுரங்க வழிப்பாதையில் தேங்கும் நீரை வெளியேற்றுவதற்கு ரெயில்வே நிர்வாகம் நேற்று சுரங்க வழிப்பாதை மத்திய பகுதியில் கழிவுநீர் சீராக செல்வதற்கு ரோட்டின் கான்கிரீட் தளத்தை உடைக்கும் பணியை தொடங்கியது.
இந்தப் பணி ரெயில்வே உதவி என்ஜினீயர் லோகராஜன், என்ஜினீயர் ரமேஷ் ஆகியோர் மேற்பார்வையில் தொடங்கியது. இந்த பணி முடியும் வரை போக்குவரத்து மாற்று வழியில் செல்ல கோவில்பட்டி போலீசார் ஏற்பாடு செய்தார்கள். இந்த பணிகள் முடியும் வரை சுரங்க வழிப் பாதையில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆய்வு
சுரங்க வழிப்பாதையில் சர்வீஸ் ரோடு போடப்படாததால் அப்பகுதியில் போக்குவரத்து வசதி இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிப்படுவதாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து அப்பகுதியை  அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில்,‘ இப்பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும், என்றார்.

Next Story