முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ‘பெல்’ நிறுவன ஊழியர்கள் ரூ.1 கோடியே 29 லட்சம் நன்கொடை
முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ‘பெல்’ நிறுவன ஊழியர்கள் ரூ.1 கோடியே 29 லட்சம் நன்கொடை மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, பாரத மிகுமின் (பெல்) நிறுவனத்தின் சென்னை தென்மண்டல ‘பவர் செக்டார்’ நிர்வாக இயக்குனர் ஜி.முரளி, திருச்சி பொதுமேலாளர் (பொறுப்பு) டி.எஸ்.முரளி, திருமயம் மற்றும் சென்னை குழாய் மையத்தின் தலைமை பொதுமேலாளர் கே.கணேசன், திருச்சி கூடுதல் பொதுமேலாளர் பாலி ஆகியோர் நேற்று சந்தித்தனர்.
மு.க.ஸ்டாலினிடம், அவர்கள், ‘கொரோனா நிவாரண பணிகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்கள் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் ஊதியமான 1 கோடியே 28 லட்சத்து 84 ஆயிரத்து 67 ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.
அப்போது நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story