மாவட்ட செய்திகள்

ரெயில் மோதி மயில் சாவு + "||" + Rail collision peacock death

ரெயில் மோதி மயில் சாவு

ரெயில் மோதி மயில் சாவு
ரெயில் மோதி மயில் பரிதாபமாக இறந்தது.

வடமதுரை:
வடமதுரை ெரயில் நிலையம் அருகே தண்டவாளத்தின் நடுவே பெண் மயில் ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து ெரயில்வே ஊழியர்கள் அய்யலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனக்காப்பாளர் கிரேசிஉஷாதேவி, வனக்காவலர் தங்கராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மயிலின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் நேற்று காலை 8 மணியளவில் திருச்சியிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ெரயில் மோதி மயில் இறந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வடமதுரை கால்நடை டாக்டர் நாகராஜன் மயிலின் உடலை பரிசோதனை செய்தார். பின்னர் வனத்துறையினர் மயிலின் உடலை வனப்பகுதியில் புதைத்தனர்.