ஆலங்குப்பம் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி
ஆலங்குப்பம் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
அரசூர்,
ரெயில்வே சுரங்கப்பாதை
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆலங்குப்பம் கிராமத்தில் விழுப்புரம்- விருத்தாசலம் ரெயில்வே இருப்புப்பாதையின் கீழ் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அப்பகுதி விவசாயிகள் தங்களது வயல்களில் அறுவடை செய்த தானியங்களை சுரங்கப்பாதை வழியாக எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார்கள்.
மேற்கூரைஅமைக்கவேண்டும்
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக இந்த சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பாதை வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் விவசாயிகள் பெரும் சிரமங்களுக்கு இடையே சுரங்கப்பாதையை கடந்து செல்கிறார்கள். எனவே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதோடு, நிரந்தரமாக சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காத வண்ணம் மேற்கூரைஅமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
Related Tags :
Next Story