வாலாஜாவில் அரிசி கடையின் ஓட்டை பிரித்து ரூ.3 லட்சம் திருட்டு
வாலாஜாவில் அரிசி கடையின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் ரூ.3 லட்சத்தை திருடிச்சென்றனர்.
வாலாஜா,
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நரசோஜிராவ் தெருவில் வசிப்பவர் அயாத்கான் (வயது 65). இவர் நகராட்சி தினசரி மார்க்கெட் எதிரே உள்ள மகாதேவ மளிகை வீதியில் 20 ஆண்டுகளாக அரிசி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர், தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஆவார்.
அவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். வழக்கம் போல நேற்று காலை கடையை திறந்தார். அப்போது, மூட்டையில் இருந்து அரிசி கிழே கொட்டி கிடந்ததை பார்த்தார். பின்னர் கடையை சுற்றி பார்த்தபோது, கடையின் மேற்கூரையின் ஓட்டை பிரித்து உள்ேள புகுந்த மர்ம நபர்கள் கடையில் வைத்திருந்த ரூ.3 லட்சத்தை திருடிக்கொண்டு, போலீஸ் மோப்ப நாய் தங்களை காட்டிக்கொடுத்து விடக்கூடாது என்பதற்காக மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர்.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து அவர், வாலாஜா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு நடந்த அரிசி கடை அருகே வாலாஜா போலீஸ் நிலையம், நூலகம், தினசரி மார்க்கெட், பஸ் நிறுத்தம் ஆகியவை இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story