கோவையில் இருந்து துபாய்க்கு 3 பயணிகளுடன் சென்ற விமானம்


கோவையில் இருந்து துபாய்க்கு 3 பயணிகளுடன் சென்ற விமானம்
x
தினத்தந்தி 2 July 2021 10:15 PM IST (Updated: 2 July 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் இருந்து துபாய்க்கு 3 பயணிகளுடன் சென்ற விமானம்

வடவள்ளி

ஊரடங்கு தளர்வுக்கு பின் கோவையில் இருந்து துபாய்க்கு முதல்முறை யாக 3 பயணிகளுடன் விமானம் சென்றது.

தொழில் அதிபர்

கோவை வடவள்ளியை சேர்ந்த தொழில் அதிபர் கண்ணப்பன், துபாயில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். அவரது மூத்த மகள் ஷாம்லி டாக்டருக்கு படித்து உள்ளார். 


ஷாம்லி, மருத்துவ மேல்படிப்பில் சேர (எம்.டி.) நீட் தேர்வு எழுதுவ தற்காக அவர்கள் கடந்த 75 நாட்களுக்கு முன்பு கோவை வந்தனர். 

இதற்கிடையே கொரோனா காரணமாக நீட் தேர்வு நடைபெற வில்லை. மேலும் ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளுக்கு விமானங்களும் இயக்கப்பட வில்லை.

கோவேக்சின் தடுப்பூசி

இதனால் அவர்கள் துபாய்க்கு செல்ல முடியாமல் கடந்த 75 நாட்க ளுக்கு மேலாக கோவையில் தங்கியிருந்தனர். 

இதற்கிடையே அவர்கள் 3 பேரும் கொரோனாவுக்கு கோவேக்சின் தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக் கொண்டனர்.

இந்த நிலையில் துபாயில் இருந்து கோவைக்கு சிறப்பு விமானம் இயக்கப்பட்டது. 

இதையடுத்து தொழில் துறையினருக்காக இயக்கப் பட்ட பிசினஸ் கிளாஸ் விமானத்தில் தனது மனைவி மற்றும் மகளு டன் நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவையில் இருந்து ஏர் அரேபியா என்ற தனி விமானத்தில் துபாய்க்கு புறப்பட்டார். 

அவர்கள் 4 மணி நேரம் பயணம் செய்து காலை 8 மணிக்கு துபாய் சென்று சேர்ந்தனர். ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் இருந்து துபாய் சென்ற முதல் விமானத்தில் கோவையை சேர்ந்த தொழில் அதிபர் தனது மனைவி, மகளுடன் சென்றது குறிப்பிடத்தக்கது.


Next Story