கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்


கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்
x
தினத்தந்தி 2 July 2021 10:36 PM IST (Updated: 2 July 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் பற்றாக்குறை காரணமாக கொரோனா தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். எனவே கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

வால்பாறை

வால்பாறையில் பற்றாக்குறை காரணமாக கொரோனா தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். எனவே கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

கொரோனா தடுப்பூசி 

மலைப்பிரதேசமான வால்பாறையில் கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

குறிப்பாக அனைத்து முகாம்களிலும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆனால் குறிப்பிட்ட அளவே தடுப்பூசி வருவதால், பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை நீடித்து வருகிறது.

ஏமாற்றத்துடன் திரும்பினர் 

இந்த நிலையில் வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் மொத்தம் 1,092 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. 

முன்னதாக தடுப்பூசி போட காலையில் இருந்தே முகாம்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். ஆனால் பற்றாக்குறை காரணமாக வரிசையில் காத்திருந்த பலருக்கு தடுப்பூசி போட முடியவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

கூடுதலாக ஒதுக்கீடு 

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, வால்பாறையில் குறைந்த அளவே மக்கள் தொகை உண்டு. இங்குள்ளவர்கள் தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

ஆனால் ஒவ்வொரு நாளும் குறைந்த அளவே தடுப்பூசி அனுப்பி வைக்கப்படுகிறது. ஒருநாள் முழுவதும் காத்து நின்று தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை நீடித்து வருகிறது. 

எனவே இங்கு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றனர். 


Next Story