மாவட்ட செய்திகள்

கொரோனா பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் புதிதாக பொறுப்பேற்ற சப் கலெக்டர் உறுதி + "||" + Corona proliferation is completely controlled

கொரோனா பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் புதிதாக பொறுப்பேற்ற சப் கலெக்டர் உறுதி

கொரோனா பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் புதிதாக பொறுப்பேற்ற சப் கலெக்டர் உறுதி
பொள்ளாச்சி பகுதியில் கொரோனா பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உறுதி அளித்தார்.
பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதியில் கொரோனா பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உறுதி அளித்தார்.

சப்-கலெக்டர் பொறுப்பேற்பு 

பொள்ளாச்சி சப்-கலெக்டராக பணியாற்றிய வைத்திநாதன், பதவி உயர்வு பெற்று தர்மபுரி மாவட்டத்திற்கு கூடுதல் கலெக்டர் (திட்டங்கள்) இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து வருவாய் கோட்டாச்சியர் (பொறுப்பு) மகாராஜ் தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். 

இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உதவி கலெக்டராக (பயிற்சி) பணியாற்றிய தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் பொள்ளாச்சி சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டார். 

அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரிடம் மகாராஜ் பொறுப்புகளை ஒப்படைத்தார். புதிதாக பொறுப்பேற்ற சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் கூறியதாவது:-

முழுமையாக கட்டுப்படுத்தப்படும் 

பொள்ளாச்சி பகுதியில் கொரோனா பரவல் தற்போது குறைந்து உள்ளது. இருப்பினும் முழுமையாக கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை அடிக்கடி கிருமி நாசினி மருந்து கொண்டு சுத்தப்படுத்துதல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை கடை பிடிக்க வேண்டும்.

சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை பரிசீலனை செய்து, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரிகள் வாழ்த்து 

சப்-கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்ட சுபம் ஞானதேவ்ராஜிக்கு நேர்முக உதவியாளர் தணிகவேல், தலைமை உதவியாளர் ஜெயசித்ரா, தாசில்தார்கள் அரசகுமார், விஜய குமார், சசிரேகா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.