கொரோனா நிவாரண பணிகளுக்கு செவிலியர் பள்ளிகள், கல்லூரிகள் சங்கம் சார்பில் ரூ.56 லட்சம் நிதி


கொரோனா நிவாரண பணிகளுக்கு செவிலியர் பள்ளிகள், கல்லூரிகள் சங்கம் சார்பில் ரூ.56 லட்சம் நிதி
x
தினத்தந்தி 2 July 2021 5:18 PM GMT (Updated: 2 July 2021 5:18 PM GMT)

கொரோனா நிவாரண பணிகளுக்கு செவிலியர் பள்ளிகள், கல்லூரிகள் சங்கம் சார்பில் ரூ.56 லட்சம் நிதி மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்.

சென்னை,

அகில இந்திய அங்கீகரிக்கப்பட்ட செவிலியர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சங்கத்தின் தலைவர் ஆர்.விவேகானந்தன், ஒருங்கிணைப்பாளர் எஸ்.சிதம்பரம், உயர்நிலை கமிட்டி உறுப்பினர்கள் ஆர்.குப்புசாமி, எஸ்.செந்தில்குமார், வி.ஆறுமுகம் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண பணிகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.56 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்கள். அப்போது மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் இருந்தார்.

இதேபோல், இ.எஸ்.ஐ. மருத்துவமனை பணியாளர்களின் ஒருநாள் ஊதியமான ரூ.40 லட்சத்து 18 ஆயிரத்து 530-க்கான காசோலையை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். அவருடன் தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை செயலாளர் கிர்லோஷ்குமார், இ.எஸ்.ஐ. மருத்துவமனை இயக்குனர் டாக்டர் அசோக்குமார் ஆகியோர் இருந்தனர்.

பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் அதன் நிறுவனர் அ.மாயவன், தலைவர் எஸ்.பக்தவச்சலம், பொருளாளர் சி.ஜெயக்குமார் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, ரூ.32 லட்சத்துக்கான காசோலையை கொடுத்தனர். அப்போது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடன் இருந்தார்.

Next Story