புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை
மனைவியிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
பொள்ளாச்சி
மனைவியிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
புதுமாப்பிள்ளை
பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம்புதூரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 29). இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு தனது தாய்மாமா மகளான சரண்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வரும் சரண்யா, தற்போது கொரோனா காரணமாக கோமங்கலம்புதூரில் ரமேசுடன் வசித்து வந்தார்.
மனைவியுடன் அடிக்கடி தகராறு
இந்த நிலையில் சரண்யாவிடம், நீ குண்டாக இருப்பதால் எனக்கு உன்னை பிடிக்கவில்லை என்று ரமேஷ் அடிக்கடி கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.
இதற்கிடையே ஆன்லைனில் தேர்வு எழுதிக்கொண்டு இருந்த சரண்யாவிடம், நீ குண்டாக இருக்கிறாய், உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்று ரமேஷ் சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
தீக்குளித்து தற்கொலை
இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ், உன்னுடன் வாழ்வதற்கு நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என்றுக்கூறி, வீட்டைவிட்டு வேகமாக வெளியே சென்று அங்கு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து ஒரு பாட்டலில் பெட்ரோலை பிடித்தார்.
இதனால் பதறிபோன சரண்யா, அருகே வசித்து வரும் தனது மாமனார் வீட்டிற்கு ஓடிச்சென்று அவரை அழைத்து வந்தார்.
ஆனால் அதற்குள் ரமேஷ் தன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story