பரமத்தி அருகே மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலி


பரமத்தி அருகே மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலி
x
தினத்தந்தி 2 July 2021 11:38 PM IST (Updated: 2 July 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

பரமத்தி அருகே மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலி

பரமத்திவேலூர்:
பரமத்தி அருகே மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலியானார்.
கூலித்தொழிலாளி
பீகார் மாநிலம் மொகில்சிபூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சை குமார் (வயது 20). இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே சுண்டபனை பகுதியில் உள்ள ஒரு அட்டை மில்லில் தங்கி கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு அட்டை மில்லில் வேலை செய்து கொண்டிருந்தபோது தனது செல்போனை அங்குள்ள 'சுவிட்ச் பாக்சில்' சார்ஜர் போட்டுள்ளார். 
பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு சுவிட்ச்பாக்சில் ேபாடப்பட்டிருந்த சார்ஜரில் இருந்து செல்போனை‌ எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ரஞ்சை குமாரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவரை மில்லில் வேலை பார்த்து கொண்டிருந்த சக தொழிலாளர்கள் மீட்டு பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 
விசாரணை
அங்கு ரஞ்சை குமாைர பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story