தொழுவம் சரிந்து விழுந்து மாடு செத்தது


தொழுவம் சரிந்து விழுந்து மாடு செத்தது
x
தினத்தந்தி 3 July 2021 1:00 AM IST (Updated: 3 July 2021 1:00 AM IST)
t-max-icont-min-icon

மரத்தின் மீது மின்னல் தாக்கிய அதிர்வில் தொழுவம் சரிந்து விழுந்து மாடு செத்தது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது பெரம்பலூர் துறைமங்கலம் காட்டுப்பகுதியில் உள்ள ஒரு வாகை மரத்தின் மீது மின்னல் தாக்கியது. அந்த அதிர்வில் அருகே ஓடுகளினாலான மாட்டு தொழுவம் சரிந்து விழுந்ததில், அங்கு கட்டப்பட்டிருந்த துறைமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணக்குமார் (வயது 44) என்பவரின் பசுமாடு செத்தது. மழை பெய்தபோது சூறாவளி காற்றும் வீசியதால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
பாடாலூர்-94, பெரம்பலூர்-87, செட்டிகுளம்-75, புதுவேட்டக்குடி-40, தழுதாழை-11, வி.களத்தூர்-5, வேப்பந்தட்டை, எறையூர், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் தலா 7 மில்லி மீட்டர் மழையும், அகரம்சீகூர், லப்பைக்குடிகாடு ஆகிய பகுதிகளில் தலா 1 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

Related Tags :
Next Story