ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல்
அருப்புக்கோட்டை அருகே ரேஷன் அரிசி மூடைகளைபறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைதுசெய்தனர்.
விருதுநகர்,
மாவட்ட சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசார் அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி மேல்நிலை தொட்டி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் தலா 40 கிலோ எடை உள்ள 21 மூடை ரேஷன் அரிசி இருந்ததை கண்டறிந்தனர். அதனை தொடர்ந்து வேனுடன் ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்த போலீசார் வேனில் இருந்த மதுரை காமராஜர் புரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது30), மாரிச்செல்வம்வயது (27) ஆகிய 2 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூடைகள் நுகர்பொருள் வாணிபக்கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story