மது விற்ற 2 பேர் மீது வழக்கு; 123 மதுபாட்டில்கள் பறிமுதல்
மது விற்ற 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 123 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்த் மற்றும் முருகன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கல்லாத்தூர் அருகே உள்ள தண்டலை- மங்களம் கிராமம் மற்றும் வெட்டியார்வெட்டு ஆகிய பகுதிகளில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது தண்டலை -மங்களம் கிராமத்தை சேர்ந்த ஆதிமூலம், வெட்டியார்வெட்டு கிராமத்தைச் சேர்ந்த தனகோபால் ஆகியோர் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிந்து, அவர்களிடம் இருந்து 123 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story