மாவட்ட செய்திகள்

தொழிலாளி பலி + "||" + death

தொழிலாளி பலி

தொழிலாளி பலி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ெரயிலில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
சிவகாசி, 
சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்பாதையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பலத்த காயத்துடன் இறந்துகிடந்தார். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது இறந்தவர் ஏ.துலுக்கப்பட்டியை சேர்ந்த சின்னப்பாண்டி மகன் வேல்முருகன் (வயது 34) என்பது தெரியவந்தது. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இரவு வீட்டில் இருந்து வெளியே கிளம்பி சென்றவர் அந்த வழியாக சென்ற சென்னை-செங்கோட்டை சிறப்பு ரெயிலில் சிக்கி இறந்து இருக்காலம் என போலீசார் தெரிவித்தனர். ரெயிலில் சிக்கி வேல்முருகன் இறந்தது குறித்து அவரது உறவினர்களுக்கு ரெயில்வே போலீசார் தகவல் தெரிவித்தனர். உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து வேல்முருகன் உடலை பார்த்து கதறி அழுதனர். வேல்முருகனுக்கு மகேஸ்வரி (30) என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. போலீஸ் பணி உடற்தகுதி தேர்வில் ஓடிய வாலிபர், ைமதானத்தில் மயங்கி விழுந்து சாவு
விருதுநகரில் 2-ம் நிலை ேபாலீஸ் பணியிடத்திற்கான உடற்தகுதி தேர்வில் ஓடிய வாலிபர் திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
2. தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை
சிவகாசி அருகே தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
3. மொபட்டில் இருந்து நிலைதடுமாறி விழுந்த இறைச்சிக்கடை உரிமையாளர் பலி
மொபட்டில் இருந்து நிலைதடுமாறி விழுந்த இறைச்சிக்கடை உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.
4. கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் சாவு
கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
5. கல்குவாரி கிடங்கு நீரில் மூழ்கி வாலிபர் பலி
சிவகாசியில் கல்குவாரி கிடங்கு நீரில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.