சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்


திருச்சி
x
திருச்சி
தினத்தந்தி 2 July 2021 7:51 PM GMT (Updated: 2 July 2021 7:51 PM GMT)

சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி
கொரோனா தொற்று பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தெரு வியாபார தொழிலாளர்கள், அவர்கள் ஏற்கனவே வியாபாரம் செய்த இடங்களிலேயே முழுமையாக வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். தெரு வியாபாரிகளுக்கும் வியாபார சான்று மற்றும் பயோ மெட்ரிக் அடையாள அட்டை வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் சட்டத்தை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தெரு வியாபார தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் சிவா தலைமை தாங்கினார். செயலாளர் அன்சர்தீன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தெரு வியாபார தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தனர்.

Next Story