மாவட்ட செய்திகள்

விஷம் குடித்து வியாபாரி தற்கொலை + "||" + Trader commits suicide by drinking poison

விஷம் குடித்து வியாபாரி தற்கொலை

விஷம் குடித்து வியாபாரி தற்கொலை
வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் விஷம் குடித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
குன்னம்:
குன்னம் அருகே உள்ள அணைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 56). மக்காச்சோளம் வாங்கி, விற்கும் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த செல்வராஜ் நேற்று முன்தினம் கொளக்காநத்ததில் உள்ள தனது கடையில் வைத்து பூச்சி மருந்தை(விஷம்) குடித்தார். இது பற்றி தகவல் அறிந்த உறவினர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில்  இருந்த அவரை மீட்டு, கொளக்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து செல்வராஜின் மனைவி மீனாம்பாள் கொடுத்த புகாரின்பேரில் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வியாபாரி வீட்டில் 14 பவுன் நகை கொள்ளை
திருக்கோவிலூர் அருகே வியாபாரி வீட்டில் 14 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2. நாகூர் அருகே விற்பனைக்காக வைத்திருந்த 110 லிட்டர் சாராய பாக்கெட் பறிமுதல் சாராய வியாபாரி கைது
நாகூர் அருகே விற்பனைக்காக வைத்திருந்த 110 லிட்டர் சாராய பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சாராய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
3. திருமண ஆசைவார்த்தை கூறி கேரள சிறுமி கடத்தல் பானிபூரி வியாபாரி கைது
திருமண ஆசைவார்த்தை கூறி கேரள சிறுமி கடத்தல் பானிபூரி வியாபாரி கைது.
4. நடத்தையில் சந்தேகம்: மனைவியை எரித்து கொன்று வியாபாரி தற்கொலை தீயில் கருகிய மகளுக்கு தீவிர சிகிச்சை
மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை உயிருடன் தீவைத்து எரித்து கொன்று விட்டு இரும்பு வியாபாரியும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதை தடுக்க வந்த மகள் பலத்த தீக்காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.