பிற மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 113 பேருக்கு கொரோனா பாதிப்பு


பிற மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 113 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 2 July 2021 8:22 PM GMT (Updated: 2 July 2021 8:22 PM GMT)

பிற மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 113 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம்,
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. வெளிமாவட்டங்களில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு வந்தவர்களில்தான் அதிகம் பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது கடந்த 10 நாட்களில் மட்டும் சென்னை, நாமக்கல், தர்மபுரி, காஞ்சீபுரம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு வந்த 787 பேருக்க தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று புதிதாக 268 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, சேலம் மாநகராட்சி பகுதியில் 40 பேர், சேலம் ஒன்றிய பகுதியில் 84 பேர், ஆத்தூர் பகுதியில் 20 பேர், நகராட்சி பகுதியில் 11 பேரும் பாதிக்கப்பட்டனர். இதுதவிர பிற மாவட்டங்களில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு வந்த 113 பேருக்கு கொரோனா இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ள்ளது.
உயிரிழப்பு இல்லை
மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 561 ஆக அதிகரித்துள்ளன. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 458 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து 1,583 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனாவுக்கு தினமும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனாவுக்கு நேற்று யாரும் பலியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story