மாவட்ட செய்திகள்

வீட்டில் கஞ்சா பதுக்கியவர் கைது + "||" + Man arrested for possession of cannabis at home

வீட்டில் கஞ்சா பதுக்கியவர் கைது

வீட்டில் கஞ்சா பதுக்கியவர் கைது
கடையநல்லூர் அருகே வீட்டில் கஞ்சா பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
அச்சன்புதூர்:
தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி அருகே திரிகூடபுரம் காந்தி காலனியில் குடியிருக்கும் கடையநல்லூரை சேர்ந்தவர் முகம்மது மீத்தின் (வயது 53) என்பவர் கஞ்சா விற்பனை செய்வதாக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜூக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சொக்கம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான போலீசார் அவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பின்னர் முகம்மது மீத்தினை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது கஞ்சா விற்பனை செய்ததாக 8 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.