மாவட்ட செய்திகள்

கோஷ்டி மோதலில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு + "||" + Sickle cut for 4 in factional clash

கோஷ்டி மோதலில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு

கோஷ்டி மோதலில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு
ஆலங்குளம் அருகே கோஷ்டி மோதலில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே சிவலார்குளத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. கருப்பசாமியின் வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டை இரு தரப்பினரும் உரிமை கொண்டாடி வந்துள்ளனர். இதனிடையே அந்த வீட்டில் அதே ஊரை சேர்ந்த கார்த்திக் என்பவர் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை முத்துப்பாண்டி மற்றும் மகன்கள் கல்யாணசுந்தரம் (வயது25), பெர்லின் (20) ஆகியோர் அந்த வீட்டிற்கு சென்று கார்த்திக்கின் மனைவியிடம் வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளனர். இதுகுறித்து கார்த்தியிடம் தகவல் தெரிவிக்கவே, தான் வெளியூரில் இருப்பதால் தனது தம்பி செந்திலை சம்பவ இடத்திற்கு சென்று கேட்குமாறு கூறியுள்ளார். உடனே அங்கு சென்ற செந்தில், முத்துப்பாண்டியிடம் முறையிட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே கைகலப்பாக மாறியது. இரு தரப்பினரும் அரிவாளைக் கொண்டு தாக்கியதில் செந்தில் கையில் வெட்டுபட்டு காயமடைந்தார். மற்றொரு தரப்பில் முத்துப்பாண்டி, கல்யாணசுந்தரம், பெர்லின் ஆகியோருக்கு வெட்டு விழுந்தது. தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.