2-வது நாளாக ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை
திருப்பூருக்கு வருகிற தொழிலாளர்களுக்கு 2-வது நாளாக ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர்
திருப்பூருக்கு வருகிற தொழிலாளர்களுக்கு 2-வது நாளாக ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தொழிலாளர்கள்
கொரோனா 2-வது அலை மிகவும் வேகமாக பரவியதால் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது கொரோனா பாதிப்பும் தமிழகத்தில் குறைந்து வருகிறது. ஒவ்வொரு ஊரடங்கு நீட்டிப்பின் போதும் தமிழக அரசு சில சலுகைகளை வழங்கி வருகிறது.
இந்த ஊரடங்கின் போது திருப்பூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் குறிப்பிட்ட சதவீத தொழிலாளர்களுடன் இயங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது.
இதன் பின்னர் தற்போதைய தளர்வில் பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் 100 சதவீத தொழிலாளர்களுடன் இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் திருப்பூருக்கு திரும்பி வர தொடங்கியுள்ளனர்.
2-வது நாளாக பரிசோதனை
இந்த நிலையில் மேலும் தொற்று பாதிப்பு பரவாத வகையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக நேற்று திருப்பூர் ரெயில் நிலையத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து இறங்கிய தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று முன்தினம் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையே நேற்று 2-வது நாளாகவும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட தொழிலாளர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று உறுதி செய்யப்படுகிறவர்களுக்கு சுகாதாரத்துறையினர் சிகிச்சை அளிக்க முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story