மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்- கார் மோதல்; சமையல்காரர் பலி + "||" + Motorcycle-car collision; The cook kills

மோட்டார் சைக்கிள்- கார் மோதல்; சமையல்காரர் பலி

மோட்டார் சைக்கிள்- கார் மோதல்; சமையல்காரர் பலி
படப்பை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சமையல்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
படப்பை,

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் முள்ளிப்பாக்கம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 44). சமையல்காரர். இவர் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சாலமங்கலம் லட்சுமி நகர் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் சரவணன் தனது மோட்டார் சைக்கிளில் வஞ்சுவாஞ்சேரி அருகே சாலையில் திரும்பும் போது ஒரகடம் பகுதியில் இருந்து வண்டலூர் நோக்கி வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.