சென்னை பாடியில் பயங்கரம்: வங்கி பெண் அதிகாரி சுத்தியலால் அடித்துக்கொலை


சென்னை பாடியில் பயங்கரம்: வங்கி பெண் அதிகாரி சுத்தியலால் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 3 July 2021 11:30 AM IST (Updated: 3 July 2021 11:30 AM IST)
t-max-icont-min-icon

மது குடிக்க பணம் தராததால் வங்கி பெண் அதிகாரியான தனது மனைவியை சுத்தியலால் அடித்துக்கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

திரு.வி.க. நகர்,

சென்னை பாடி கலைவாணர் நகர் மதுரைவீரன் தெருவைச் சேர்ந்தவர் மனோ பாரதி (வயது 37). இவர், கிண்டியில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி கிளையில் மேலாளராக வேலை செய்து வந்தார்.

இவருடைய கணவர் அச்சுதனன்(41). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். குடி பழக்கத்துக்கு அடிமையான அச்சுதனன், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

நேற்று மாலை போதையில் இருந்த அச்சுதனன், தன் மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தார். ஆனால் அவர் கொடுக்க மறுத்தார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அச்சுதனன், வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து மனோ பாரதியின் தலையில் ஓங்கி அடித்தார்.

இதில் படுகாயம் அடைந்த மனோ பாரதியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மனோ பாரதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருடைய கணவர் அச்சுதனனை கைது செய்தனர்.

Next Story