திருப்பத்தூர் நகராட்சி பகுதிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு


திருப்பத்தூர் நகராட்சி பகுதிகளில்  கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 3 July 2021 6:20 PM IST (Updated: 3 July 2021 6:20 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் நகராட்சி பகுதிகளில் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் நகராட்சி பகுதிகளில் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா திடீரென ஆய்வு மேற்கொண்டார். கால்வாய்கள், தெருக்களை சுத்தமாக வைத்துக் கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

எந்திரங்களை கொண்டு தூர்வார வேண்டும்

திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. அனைத்துத் தெரு பகுதிகளிலும் உள்ள கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை, என கலெக்டருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. கலெக்டர் அமர்குஷ்வாஹா திடீரென புதுப்பேட்டை பகுதியில் உள்ள கால்வாய் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு, கால்வாயில் குப்பைகள் அடைத்துக் கொண்டு, சாக்கடைநீர் ஓடாமல் இருந்ததைத் தூர்வார வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அங்கிருந்து அபாய்தெருவில் உள்ள வெள்ள கால்வாய், அப்துல்மாலிக் தெரு, பெரியார் நகர் பகுதியில் உள்ள பெரிய கால்வாய் ஆகியவற்றை பார்வையிட்டார். அனைத்துப் பகுதி கால்வாய்களை தூர்வார வேண்டும், 15 நாட்களுக்கு ஒருமுறை எந்திரங்களை கொண்டு தூர்வார உத்தரவிட்டார்.

அப்போது கலெக்டர், இந்தக் கழிவுநீர் எங்குச் செல்கிறது, எனக் கேட்டார். அதற்கு நகராட்சி அதிகாரிகள், கழிவுநீர் பெரிய ஏரி, அந்தனேரியில் கலப்பதாக கூறினர். 

தார் சாலை அமைக்கும் பணி

அனைத்துப் பகுதி கால்வாய்களில் இருந்து வெளியேற்றப்படும் சாக்கடைநீர் உடனடியாக பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிக்கப்படும் இடத்துக்கு செல்ல நகராட்சி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். 

அபாய் தெருவில் குடிநீருடன் கழிவுநீர் கலப்பதாக புகார் கூறப்பட்டது குறித்து உடனடியாக சீர் ெசய்து தரப்படும் எனக் கூறினார். 

36 வார்டுகளுக்கும் தினமும் வழங்கப்படும் குடிநீர் குறித்துத் தெரிவிக்க வேண்டும். அனைத்துத் தெருக்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மாதேஷ் என்ற துப்புரவு ஆய்வாளர் பணிக்கு வராமல் இருப்பதற்கு மெமோ கொடுக்க உத்தரவிட்டார். 

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் புதுக்கோட்டை ஊராட்சி கனமந்தூரில் இருந்து ஜலகாம்பாறை வழியாக வெங்காயப்பள்ளி வரை ரூ.82 லட்சம் செலவில் 2 கி.மி. தூரம் வரை தார்சாலை அமைக்கும் பணியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

Next Story