மாவட்ட செய்திகள்

காவேரிப்பாக்கம்; மனைவியை தாக்கிய கட்டிட மேஸ்திரி கைது + "||" + Kaveripakkam; Architect arrested for assaulting wife

காவேரிப்பாக்கம்; மனைவியை தாக்கிய கட்டிட மேஸ்திரி கைது

காவேரிப்பாக்கம்; மனைவியை தாக்கிய கட்டிட மேஸ்திரி கைது
காவேரிப்பாக்கம் அருகே மனைவியை தாக்கிய கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர்.
காவேரிப்பாக்கம்

காவேரிப்பாக்கம் அருகே மனைவியை தாக்கிய கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர். 

காவேரிப்பாக்கத்தை அடுத்த கடப்பேரி நாவலர் தெருவைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 32), கட்டிட மேஸ்திரி. இவரின் மனைவி மீனா (28). அவர்களுக்கு இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 

கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

அதேபோல் நேற்று முன்தினமும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த தர்மலிங்கம், மனைவி மீனாவை தாக்கினார். 

அதில் அவர் நிலை குலைந்து சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவர், வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். 

இதுகுறித்த புகாரின்பேரில் காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதுதொடர்பாக தர்மலிங்கம் கைது செய்யப்பட்டார்.