கோவில்கள், வழிபாட்டுத்தலங்கள் நாளை திறப்பு
கோவில்கள், வழிபாட்டுத்தலங்கள் நாளை திறப்பு
கோவை
கோவை மாவட்டத்தில் கோவில்கள் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் நாளை (திங்கட்கிழமை) முதல் திறக்கப்படுகின்றன. ஆனால் பூஜை பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா அச்சம்
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டு இருந்தது. பக்தர்கள் வழிபாடு செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.
ஆனால் கோவில்களில் அந்தந்த பணியாளர்கள் மட்டும் சென்று வழக்கமான பூஜைகளை செய்து வந்தனர். வழிபாட்டு தலங்கள் திறக்கப்படாமல் இருந்ததால் பக்தர்கள் கவலையில் இருந்தனர்.
இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) முதல் தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் உள்பட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இதைத்தொடர்ந்து கோவையில் உள்ள கோவில்கள், மசூதிகள், கிறிஸ் தவ ஆலயங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் பணிகள் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகி றது.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது
தரிசனம் செய்ய அனுமதி
கோவை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் 273 கோவில்கள் உள்ளன. அந்த கோவில்களில் சாமி தரிசனம் செய்ய 5 -ந் தேதி (நாளை) முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். கோவில் நுழைவு வாயிலில் உள்ள கிருமி நாசினியால் பக்தர்கள் கைகளை சுத்தம் செய்து விட்டு உள்ளே வர வேண்டும்.
பக்தர்களின் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் மூலம் சரி பார்க்க ப்படும். இதில், உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பூ, பழம், மாலை உள்ளிட்ட பூஜை பொருட்களை கொண்டு வர அனுமதி கிடையாது. சாமி தரிசனம் செய்ய மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
அபிஷேகத்தின் போது பக்தர்கள் கோவிலுக்குள் அமர அனுமதிக்கப் பட மாட்டார்கள். விபூதி, குங்குமம் ஆகியவை பிரசாத தட்டில் வைக் கப்பட்டு இருக்கும். அதை பக்தர்கள் எடுத்துக்கொள்ளலாம்.
கொரோனா தடுப்பு விதிகளை பக்தர்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இபோல மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்களிலும் வழிபாடு நடத்துவதற்கு உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
Related Tags :
Next Story