மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டத்தில்மேலும் 49 பேருக்கு கொரோனா + "||" + In Theni district Corona for 49 more

தேனி மாவட்டத்தில்மேலும் 49 பேருக்கு கொரோனா

தேனி மாவட்டத்தில்மேலும் 49 பேருக்கு கொரோனா
தேனி மாவட்டத்தில் மேலும் 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
தேனி :
தேனி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்து 469 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 45 பேர் நேற்று குணமாகினர். தற்போது 436 பேர் இந்த வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் கொரோனா 493 பேரின் உயிரை பறித்துள்ளது. நேற்று கொரோனாவால் உயிரிழப்பு எதுவும் இல்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.