ஓச்சேரி அருகே; கன்டெய்னர் லாரியில் இருந்து ரூ.2¾ லட்சம் ஷூ திருட்டு


ஓச்சேரி அருகே; கன்டெய்னர் லாரியில் இருந்து ரூ.2¾ லட்சம் ஷூ திருட்டு
x
தினத்தந்தி 3 July 2021 9:39 PM IST (Updated: 3 July 2021 9:39 PM IST)
t-max-icont-min-icon

ஓச்சேரி அருகே கன்டெய்னர் லாரியில் இருந்து ரூ.2¾ லட்சம் மதிப்பிலான ஷூவை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

காவேரிப்பாக்கம்

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த. தாகிரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர்  தினேஷ்குமார் (வயது 22), லாரி டிரைவர். 

இவர் கடந்த 1-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் இருந்து முன்னணி நிறுவன ஷூ 149 பெட்டிகளில் கன்டெய்னர் லாரி மூலம் ஏற்றிக்கொண்டு போச்சம்பள்ளியில் இருந்து சென்னை மணலிக்கு சென்று கொண்டிருந்தார். 

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது  தூக்கக் கலக்கம் காரணமாக தினேஷ்குமார் கன்டெய்னர் லாரியை அவளூர் அருகே சர்வீஸ் ரோட்டில் நிறுத்திவிட்டு தூங்கினார். 

மறுநாள் காலை எழுந்து பார்க்கும் போது கன்டெய்னர் லாரி பின்பக்கம் பூட்டை உடைத்து 38 பெட்டிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. 

இதுகுறித்து தினேஷ்குமார் அவளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 மர்ம நபர்கள்  திருடி சென்ற ஷூக்களின் மதிப்பு ரூ.2¾ லட்சம் என டிரைவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story