மாவட்ட செய்திகள்

உடுமலையிலிருந்து இளநீர் டெல்லி கொண்டு செல்லப்படுவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. + "||" + udumalai ilneer

உடுமலையிலிருந்து இளநீர் டெல்லி கொண்டு செல்லப்படுவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது.

உடுமலையிலிருந்து இளநீர் டெல்லி கொண்டு செல்லப்படுவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது.
உடுமலையிலிருந்து இளநீர் டெல்லி கொண்டு செல்லப்படுவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது.
போடிப்பட்டி:-
உடுமலையிலிருந்து இளநீர் டெல்லி கொண்டு செல்லப்படுவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது.
நல்ல விலை
விளைவித்தவனால் விலை வைக்க முடியாது என்பது விவசாயிகளின் அவல நிலையாக உள்ளது. இந்த நிலையை மாற்றவும், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்யவும் வழிகாட்டும் வகையில் உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்புகள்அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சுமார் ஆயிரம் விவசாயிகள் இணைந்து விவசாயிகள்உற்பத்தியாளர்கள் நிறுவனத்தை உருவாக்க முடியும். இந்த நிறுவனம் மூலம் விளைபொருட்களை மதிப்புக் கூட்டுவதற்கான எந்திரங்கள்உள்ளிட்டவற்றுக்காக அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு நல்ல விலை பெற முடிகிறது. 
அந்தவகையில் உடுமலையை அடுத்த தளி பகுதியை தலைமையிடமாகக் கொண்டு நல்லாறு தென்னை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 840 தென்னை விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளிடமிருந்து தேங்காய் பெறப்பட்டு தேங்காய் எண்ணெய், தென்னஞ்சர்க்கரை உள்ளிட்ட மதிப்புக் கூட்டுப்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகள் கூடுதல் லாபம் ஈட்டி வருகின்றனர்.
நேரடி கொள்முதல்
இந்தநிலையில் தற்போது டெல்லி, மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு இளநீர் அனுப்பும் பணிகள் இந்த நிறுவனத்தின் மூலம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
உடுமலையையடுத்த மொடக்குப்பட்டி, தளி, தேவனூர்புதூர் உள்ளிட்ட பகுதி விவசாயிகளிடமிருந்து இளநீர் கொள்முதல் செய்யப்பட்டு டெல்லி, மும்பை ஆகிய பகுதிகளுக்கு லாரிகள் மூலம் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. இடைத்தரகர் இல்லாமல் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யப்படுவதால் அதிக விலை கிடைக்கிறது. இதற்கு முன் விவசாயிகளிடம் வியாபாரிகள் இளநீர் ரூ.21-க்கு கொள்முதல் செய்தனர். ஆனால் தற்போது உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் ரூ.26-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. 
இதிலிருந்து நிறுவனத்துக்கு ஒரு லாபம் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. அந்த லாபத் தொகையும் ஆண்டுதோறும் பங்குத் தொகையாக விவசாயிகளுக்கே சென்று சேர்க்கிறது. இதன்மூலம் இளநீர் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் உறுப்பினராக உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் லாபம் கிடைக்கிறது. தற்போது முதல் கட்டமாக 10 ஆயிரம் இளநீர் அனுப்பப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து விவசாயிகளிடமும் கொள்முதல் செய்து அதிக அளவில் வெளி மாநிலங்களுக்கு அனுப்புவோம். 
இவ்வாறு அவர்கள் கூறினர்.