டிராக்டரில் மணல் கடத்திய 2 பேர் கைது


டிராக்டரில் மணல் கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 3 July 2021 10:13 PM IST (Updated: 3 July 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

கல்லல் அருகே டிராக்டரில் மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்

கல்லல்,

கல்லல் அருகே கோவினிப்பட்டி சருகணி ஆற்றில் மணல் அள்ளுவதாக இலந்தமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியமேரி கல்லல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் கல்லல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு தலைமையிலான போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது கோவினிப்பட்டி அருகே டிராக்டரில் மணல் அள்ளிய வந்த செந்நாவல்குடியை சேர்ந்த டிரைவர் ஜெயக்குமார் (வயது 28), டிராக்டர் உரிமையாளர் பாகனேரியை சேர்ந்த ஆண்டியப்பன் (57) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story