விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 3 July 2021 10:16 PM IST (Updated: 3 July 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

பூவந்தி அருகே வேலை இல்லாததால் விரக்தி அடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருப்புவனம்,

பூவந்தி போலீஸ் சரகத்தை சேர்ந்தது அரசனூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சேகர். இவரது 2-வது மகன் வினோபாலா(வயது 31). திருமணம் ஆகவில்லை. இவர் கடந்த 5 ஆண்டுகளாக சென்னையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 1½ ஆண்டுகளாக வேலை இல்லாமல் சொந்த ஊரிலேயே தந்தையுடன் இருந்து வந்து உள்ளார். வேலை இல்லாததால் மனவிரக்தியுடன் காணப்பட்டு உள்ளார். இந்த நிலையில் இவர் கடந்த மாதம் 29-ந்தேதி விஷம் குடித்து ஊரில் உள்ள ஒரு ஓட்டல் அருகே மயங்கி கிடந்தார். உடனே அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்ைச பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரிதாபாலு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



Next Story