வழிபாட்டு தலங்களை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்


வழிபாட்டு தலங்களை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 3 July 2021 10:18 PM IST (Updated: 3 July 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

நாளை முதல் திறக்கப்பட உள்ளதையொட்டி, வழிபாட்டு தலங்களை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திண்டுக்கல்:

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மே மாதம் 10-ந்தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டு கடைகள், வழிபாட்டு தலங்கள் என அனைத்தும் அடைக்கப்பட்டன. 

இதற்கிடையே கொரோனா தொற்று வெகுவாக குறைந்ததால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. 
அதன்படி நாளை (திங்கட்கிழமை) முதல் அனைத்து வழிபாட்டு தலங்கள், விடுதிகள் உள்ளிட்டவற்றை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

 இதில் வழிபாட்டு தலங்களை பொறுத்தவரை கடந்த மே மாதம் 10-ந்தேதி பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. அதேநேரம் தினமும் வழக்கமான வழிபாடும் நடத்தப்பட்டு வந்தது. 

இதனால் 55 நாட்களுக்கு பின்னர் பக்தர்கள் தரிசனத்துக்கு வழிபாட்டு தலங்கள் நாளை முதல் திறக்கப்படுகின்றன. இதையொட்டி வழிபாட்டு தலங்களை கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

 இதைத்தொடர்ந்து திண்டுக்கல் நகரில் உள்ள அபிராமி அம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களையும் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

 அதன்படி, மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்து வழிபாட்டு தலங்களை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story