மாவட்ட செய்திகள்

இடியுடன் பெய்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி + "||" + rain

இடியுடன் பெய்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி

இடியுடன் பெய்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி
இடியுடன் பெய்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு கத்தரி வெயில் சமயத்தில் புயல் காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக இந்த ஆண்டு கத்தரிவெயிலை மக்கள் பெரிய அளவில் பாதிக்காமல் கடந்தனர். ஆனால், அதற்கு பின்னர் கத்தரி வெயிலை மிஞ்சும் வகையில் கடந்த பல நாட்களாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வதைத்தது. 
இதனால் சிறியவர் முதல் பெரியவர் வரை சொல்ல முடியாத அவதி அடைந்து வந்தனர். வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கில் காற்றின் சுழற்சி காரணமாக ராமநாதபுரம் உள்பட சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.  இந்நிலையில் திடீரென்று வானம் மேகமூட்டத்துடன் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த இடி இடித்தது. சில நிமிடங்களில் மழை பெய்யத்தொடங்கி சுமார் ½ மணி நேரம் கொட்டி தீர்த்தது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தில் சிக்கி இருந்த மக்கள் இந்த திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.