மாவட்ட செய்திகள்

முன்கள பணியாளர்களுக்கு குப்பை லாரியில் உணவு கொண்டுசென்ற அவலம் + "||" + The tragedy of carrying food in a garbage truck to frontline staff

முன்கள பணியாளர்களுக்கு குப்பை லாரியில் உணவு கொண்டுசென்ற அவலம்

முன்கள பணியாளர்களுக்கு குப்பை லாரியில் உணவு கொண்டுசென்ற அவலம்
முன்கள பணியாளர்களுக்கு குப்பை லாரியில் உணவு கொண்டுசென்ற அவலம்
கோவை

கோவையில் முன்கள பணியாளர்களுக்கு வழங்குவதற்காக உணவு பொட்டலங்களை குப்பை ஏற்றிச்செல்லும் லாரியில் கொண்டு செல்லப்பட்டது. 

இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க சுகாதார ஆய்வாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.

வீடு, வீடாக பரிசோதனை

கோவை மாநகராட்சியில் கொரோனா தொற்று அறிகுறி இருந்தால் அவர்களுக்கு உடனே பரிசோதனை செய்து, தொற்று தென்பட்டால் தேவையான மருத்துவ உதவிகளை செய்து வருகின்றனர். 

இதற்காக ஒரு வார்டுக்கு 50 பேர் வீதம் 100 வார்டுகளிலும் முன் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த பணியாளர்களுக்கு மதிய உணவு தன்னார்வலர்கள் மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவு பொட்டலங்கள் அந்தந்த மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அங்கிருந்து மாநகராட்சி வேன்களில் முன்கள பணியாளர்கள் பணியாற்றும் வார்டு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும்.

குப்பை லாரியில் உணவு

இந்தநிலையில் நேற்று கோவை கிழக்கு மண்டல அலுவலகத்தில் இருந்து சிங்காநல்லூர் பகுதியில் வீடு, வீடாக பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு மதிய உணவு பொட்டலம் கொண்டு செல்லப்பட்டது. 

அப்போது ஒரு பிளாஸ்டிக் கூடைக்குள் சாப்பாடு, சாம்பார், பொறியல் என பார்சல் செய்து 50-க்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் போட்டு வைக்கப்பட்டு மாநகராட்சி குப்பைகளை ஏற்றிச்செல்லும் வாகனத்தில் கொண்டு சென்ற அவலம் நிகழ்ந்தது.


இந்த உணவு பொட்டலங்களை ஏற்றிச்சென்றதை யாரோ தனது செல்போனில் புகைப்படம் எடுத்து உள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சுகாதார ஆய்வாளருக்கு நோட்டீஸ்

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கராவிடம் கேட்டபோது, இந்த சம்பவம் தொடர்பாக புகார் வந்தது. அத்துடன் வீடியோவும் வந்து உள்ளது. 

மேலும் கிழக்கு மண்டல உதவி கமிஷனர் மூலம் சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.