மாவட்ட செய்திகள்

வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு + "||" + Collector study on development works

வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
சூலூர்

கோவை மாவட்டம், சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிட்டாம்பாளையம், கனியூர், முத்துக்கவுண்டன்புதூர், மயிலம்பாடி ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது கிட்டாம்பாளையம் ஊராட்சியில் கருவலூர்- கிட்டாம்பாளையம் இடையே ரூ.1.84 கோடி மதிப்பீட்டில் பிரதம மந்திரி ஊரக சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டு வரும் சாலைப்பணிகளையும், கணியூர் ஊராட்சியில் சென்றாம்பாளையம் - தட்டாம்புதூர் சாலை ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் மூலம் ரூ.58.45 லட்சம் செலவில் சாலை மேம்படுத்தப்பட்டு வருவதையும் பார்வையிட்டார்.

மயிலம்பட்டி ஊராட்சியில் நீலம்பூர்- சின்னியம்பாளையம் சாலை ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு இருப்பதை நேரில் பார்வையிட்ட கலெக்டர், குறிப்பிட்ட விகிதாரச்சார அடிப்படையில் ஜல்லி, மணல் மற்றும் கலவைகள் முறையாக உபயோகப்படுத்தப் பட்டிருப்பதை, சாலையினை துளையிட்டு பரிசோதித்து பார்த்தார். 

தொடர்ந்து முத்துக்கவுண்டன்புதூர் ஊராட்சியில் கீழ் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மைய கட்டிடம், மற்றும் பல்வேறு நாட்டு இன மரக்கன்றுகள் மற்றும் பலன்தரும் மரக்கன்றுகளைக் கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ள அடர்வனப்பகுதி, நாற்றங்கால் இயற்கை உரக்கூடம் ஆகியவற்றினை கலெக்டர் ஆய்வு செய்தார்.