விறகு அடுப்புக்கு மாறிய கிராம மக்கள்


விறகு அடுப்புக்கு மாறிய கிராம மக்கள்
x
தினத்தந்தி 3 July 2021 10:43 PM IST (Updated: 3 July 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

விறகு அடுப்புக்கு மாறிய கிராம மக்கள்

வடகாடு, ஜூலை.4-
வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கிராமங்களே அதிக அளவில் உள்ளன. ஆரம்பத்தில் இப்பகுதி மக்கள் விறகு அடுப்பையே அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அரசு மானிய விலையில் கியாஸ் சிலிண்டர் வழங்கியதால் பெரும்பாலான மக்கள் கியாஸ் சிலிண்டருக்கு மாறினர். அதுமட்டுமின்றி சமையல் செய்வதற்கு எளிதாக இருந்ததால் அதிகம்பேர் கியாஸ் சிலிண்டரையே பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.25 அதிகரித்து ரூ.883-க்கு விற்கப்படுவதால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்பட்டு வந்த கிராம மக்களுக்கு இது மேலும் சுமையை ஏற்படுத்தியது. இதன்காரணமாக கிராம மக்களில் சிலர் மீண்டும் விறகு அடுப்புக்கு மாறிவிட்டனர். தற்போது, அவர்கள் விறகுகளை தேடி காட்டுப்பகுதிக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Next Story