மாவட்ட செய்திகள்

தெய்வீக தமிழ் பேரவையினர் ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration by the Divine Tamil Assembly

தெய்வீக தமிழ் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

தெய்வீக தமிழ் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
தெய்வீக தமிழ் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
வடவள்ளி

கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்து சமய அற நிலைத்துறை கோவில்களில் தமிழ் முறைப்படி அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்க வேண்டும். 

தனியார் யோக மையங்களை அரசு கையகப்படுத்தி இந்து சமய அறநிலைத்துறை ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தெய்வீக தமிழ் பேரவை சார்பாக கோவை வடவள்ளியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இதில் தெய்வீக தமிழ் பேரவை சார்பில் பேராசிரியர் காமராஜ், தென்னியன், ராஜேஸ், திருவள்ளுவன், ராஜேந்திரன், சந்திரகுமார், கோபாலகிருஷ்ணன், வழக்கறிஞர் சிவசாமி, சரவணன் சுவேதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.