கோவில்பட்டியில் குறுகிய பாதையில் சிக்கிய லாரி
கோவில்பட்டியில் குறுகிய பாதையில் சிக்கிய லாரியை பொதுமக்கள் மீட்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியை அடுத்துள்ள இலுப்பையூரணி பகுதியில் இருந்து லாரி ஒன்று புதுகிராமம் சாலிகாபுரம் சந்திப்பு வழியாக கோவில்பட்டிக்கு வந்து கொண்டிருந்தது. சாலிகாபுரம் சந்திப்பு பகுதியில் குறுகிய பாதையில் அந்த லாரி சிக்கிக் கொண்டது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் காஜா மீரான் தலைமையில் அப்பகுதி மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் ½ மணி நேரம் போராடி அந்த லாரியை எவ்வித சேதமும் இன்றி மீட்டு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.
Related Tags :
Next Story