கீழே கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைந்த ஊர்காவல் படை வீரர்


கீழே கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைந்த ஊர்காவல் படை வீரர்
x
தினத்தந்தி 3 July 2021 11:02 PM IST (Updated: 3 July 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

கீழே கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைந்த ஊர்காவல் படை வீரர்

இடிகரை

கோவை பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட எல்.எம்.டபிள்யூ. பிரிவில் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் பணப்பை ஒன்று கிடந்தது. 

இதனை பெட்ரோல் நிரப்ப வந்த ஊர்காவல் படையை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் எடுத்துள்ளார். 

அந்த பையில், ஏ.டி.எம். கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் ரூ.700 இருந்தது. இதையடுத்து ஏ.டி.எம். கார்ட்டை வைத்து விசாரணை நடத்தியபோது, அது அதே பகுதியை சேர்ந்த ராணி பியூலா என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

 இதையடுத்து அவரை பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து, தவறவிட்ட பணப்பையை ஒப்படைத்தார். ஊர்காவல் படை வீரரை போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.


Next Story