ஒரே நாளில் 2,600 பேருக்கு கொரோனா தடுப்பூசி


ஒரே நாளில் 2,600 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 3 July 2021 5:49 PM GMT (Updated: 3 July 2021 5:49 PM GMT)

காரைக்குடியில் ஒரே நாளில் 2,600 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

காரைக்குடி,

காரைக்குடியில் ஒரே நாளில் 2,600 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

கொரோனா 2-வது அலை

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தற்போது அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இருப்பதால் படிப்படியாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டு இருக்கின்றனர்.
கொரோனா முதல் அலையை காட்டிலும் 2-வது அலை தாக்கத்தில் பெரும்பாலானோர் இறந்து விட்டனர். உயிரிழப்பு அதிகமாக இருந்ததால் பொதுமக்களிைடயே கொரோனா 2-வது அலை அச்சம் அதிகமாக காணப்பட்டது. இருப்பினும் கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு.

2,600 பேருக்கு தடுப்பூசி

ஆரம்ப கட்டத்தில் தடுப்பூசி போடுவதற்கு மக்கள் தயக்கம் காட்டினார்கள். பின்னர் கொரோனா 2-வது அலையின் போது நடுத்தர வயதை சேர்ந்தவர்களும் திடீரென்று இறக்க தொடங்கியதன் விளைவு தடுப்பூசி போட்டு கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்ட தொடங்கினார்கள்.காரைக்குடி அருகே உள்ள பர்மா காலனி, சாக்கோட்டை ஆகிய 2 இடங்களில் சிறப்பு முகாம் நடந்தது. இதில் நேற்று தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டினார்கள்.
சமூக இடைவெளியை பின்பற்றாமல் வரிசையில் நின்றது இன்னும் பொதுமக்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வு இல்லாததை எடுத்துக்காட்டியது. நேற்று ஒரே நாளில் காரைக்குடி பகுதியில் மட்டும் 2 ஆயிரத்து 600 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Next Story